திருப்பூரில் உணவு டெலிவரி எடுத்துச் செல்ல ஹோட்டலுக்கு வந்த ஸ்விக்கி ஊழியர், மேஜை மீது இருந்த செல்ஃபோனை யாருக்கும் தெரியாமல் லாவகமாக திருடிச்சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உணவகத்திற்குள் வந்து செல்போனை நோட்டமிட்ட அந்த ஊழியர், அதனை திருட முயன்றார். முதலில் செல்போனுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஊழியர், பின்னர் அதனை செய்தித்தாளை வைத்து மூடி மறைத்தார்.
இதனை அங்கிருந்த சமையலரும், கேஷியரும் கவனிக்காத நிலையில், சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொண்ட ஸ்விக்கி ஊழியர், யாருக்கும் தெரியாமல் செய்தித்தாளுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த செல்ஃபோனை திருடிச்சென்றார்.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்த அந்த காட்சிகளை உணவக நிர்வாகம் வெளியிட்டுள்ளது.