2023ஆம் ஆண்டிற்குள் யமுனை நதி முழுவதுமாக சுத்தம் செய்யப்படும் என டெல்லியின் நீர்வளத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
கழிவுகள் கலப்பதாலும், ரசாயன தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளாலும், யமுனைநதி தொடர்ந்து மாசடைந்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் கழிவுநீர் அனைத்தும் ஒரே இடத்தில் சேரும் வகையில் அடுத்த எட்டு மாதங்களுக்குள் கட்டமைப்பை உருவாக்க உள்ளதாக அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னதாக 2025ஆம் ஆண்டிற்குள் யமுனை நதி தூய்மைபடுத்தப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்த நிலையில், டிசம்பர் 2023ஆம் ஆண்டிற்குள் தூய்மைபடுத்தப்படும் என தற்போது அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலை போலவே, கடந்த 2020-ம் ஆண்டில் யமுனை ஆற்றில் மாசு, நுரை அதிகரித்துள்ளது பற்றி கவலை தெரிவித்த மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம், கழிவுநீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு அப்போதே உத்தரவிட்டிருந்தது. அந்த நேரத்தில் (2020-ம் ஆண்டும் இறுதியில்) யமுனை ஆற்றில் உள்ள 22 வடிகால்களை சமீபத்தில் கண்காணித்ததில், `சோனியா விஹார், சாஸ்திரி பார்க் உட்பட 14 வடிகால்கள் பயன்படுத்தப்படாமல் கழிவு நீர் திறந்துவிடப்படுகிறது. பல வடிகால்கள் முறையாக செயல்படவில்லை. தொழிற்சாலைகளின் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல் யமுனை ஆற்றில் கலப்பதால், பாஸ்பரஸ் அளவு பல மடங்கு அதிகரித்து நுரை ஏற்படுவது’ உள்ளிட்டவை கண்டறியப்பட்டது.
சமீபத்திய செய்தி: தொடரும் பெட்ரோல் தட்டுப்பாடு: ராணுவ கட்டுப்பாட்டுக்கு கீழ் இலங்கை எரிபொருள் மையங்கள்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM