Nothing Event: எதிர்பார்ப்புகளை பூர்த்து செய்யுமா 'Naked' பிராண்ட்!

ஒன்பிளஸ் நிறுவனர்களில் ஒருவரான Carl Pei, தனியாக வந்து ‘Nothing’ எனும் புதிய டெக் பிராண்டைத் தொடங்கினார். அதன் முதல் தயாரிப்பாக நத்திங் இயர் 1 வயர்லெஸ் இயர்பட்ஸ் உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய தோற்றம், நேர்த்தியான அம்சங்கள் கொண்டு இந்த இயர்பட்ஸ் களமிறக்கப்பட்டது. இயர்பட்ஸின் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் கருவிகள் அனைத்தும் வெளியே தெரியும்படி, கண்ணாடியால் உருவாக்கப்பட்டிருந்தது வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

சந்தையில் அறிமுகமான சில நாள்களில் பயனர்களின் நன்மதிப்பைப் பெற்றது இந்த இயர்பட்ஸ். இந்நிலையில், நத்திங் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு என்ன என்பது குறித்து டெக் விரும்பிகள் மத்தியில் பேச்சுகள் நிலவியது.

OnePlus வெளியிடப்போகும் 6 ஸ்மார்ட்போன்கள் – கிடைத்த சுவாரஸ்ய தகவல்கள்!

நத்திங் நிகழ்வு

இதற்கு ஊட்டமளிக்கும் விதமாக, நத்திங் நிறுவனமும், புதிய 5 தயாரிப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாக அறிவித்தது. அதிலிருந்து, இந்த பிராண்டின் புதிய தயாரிப்புகள் குறித்து பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

நத்திங் வயர்லெஸ் ஹெட்போன்ஸ், நத்திங் பவர்பேங்க், நத்திங் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என வரிசைகட்டி கதைகள் கசிந்த வண்ணம் இருந்தன. இச்சூழலில், நத்திங் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புதிய டீஸர், அனைவரின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியது. இந்நிலையில், இன்று
Nothing Event
நடக்க உள்ளதாக
Flipkart
தளத்தில் நிறுவனம் டீஸ் செய்துள்ளது.

இந்திய நேரப்படி மாலை 7:30 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது. டெக் வல்லுநர்களின் கூற்றுபடி, புதிய தகவல் சாதனம் நத்திய போன் 1 ஸ்மார்ட்போன் அல்லது நத்திங் பவர் 1 பவர்பேங்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகனுடன் நத்திங் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

நத்திங் ஸ்மார்ட்போன்

இதுவரை வெளியான தகவல்களை வைத்து பார்க்கும்போது, நத்திங் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஸ்மார்ட்போனும் டிரான்ஸ்பரன்ட் வடிவமைப்புடன் வரும் என்பது கூடுதல் சிறப்பு.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் கொண்டு இயக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல், ஸ்மார்ட் கேமரா, ஸ்மார்ட் ஸ்பீக்கர்ஸ் உடன் நத்திங் போன் 1 வெளியாகலாம் என நம்பப்படுகிறது.

வீட்டிலேயே தியேட்டர் அனுபவம் – Redmi வெளியிட்ட 100 இன்ச் ஸ்மார்ட் டிவி!
அல்ட்ரா பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன், 4210mAh பேட்டரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நிறுவனத்திடம் இருந்து எந்தவித உறுதிபடுத்தப்பட்ட தகவலும் கிடைக்கவில்லை என்றாலும், நத்திங் போன் வெறித்தனமாக இருக்கும் என்று பயனர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நத்திங் இயர் 1 சிறப்பம்சங்கள்

11.6mm திறன் வாய்ந்த இரட்டை டிரைவர்34 மணிநேர மின் சேமிப்புத் திறன்துல்லிய தொலைபேசி அழைப்புகளுக்காக மூன்று எச்டி மைக்ரோஃபோன் + ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் உடன்இயர் பட்ஸ் ஒவ்வொன்றும் 4.7 கிராம் எடை கொண்டதுவிரைவாக சார்ஜ் வசதியுடன் டைப்-சி போர்ட்10 நிமிடம் சார்ஜ் செய்தால் 8 மணிநேரம் பயன்படுத்தும் திறன்டச் சென்சார்புளூடூத் 5.2

Read more:
குறைந்த விலை Oppo A16e ஸ்மார்ட்போன் அறிமுகம் – முழு விவரங்கள்!கொளுத்தும் வெயிலுக்கு குளுகுளு AC – அதிரடி தள்ளுபடியில் சிறந்த ஸ்மார்ட் Inverter ஏசிக்கள்!iQOO Sale: அமேசான் தளத்தில் கிடைக்கும் Clone போன்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.