தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் 25, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். மேலும், சென்னையில் இரு நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை. ஆனாலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகத் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.