சென்னை: தமிழ்க பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவு மற்றும் தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி சமாதிகளில் மமலர்தூவி மரியாதை செலுத்தினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றதும் தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளதுடன், பெண் கல்விக்கு அதிக முக்கியத்து வம் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக 18ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து 19ந்தேதி தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டிலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பேணும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. 6 நாட்கள் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முற்பகலும் முடிவடைந்து, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்துக்கு அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இன்று துபாய் பயணமாகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதையொட்டி, மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி சமாதிகளில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்,.