நாட்டின் மிக பிரபலமான பொழுதுப்போக்கு அம்சங்களை கொண்ட ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று மதிய அமர்வில் 20% அதிகரித்துள்ளது.
இந்த திடீர் விலையேற்றமானது முதலீட்டாளார்களை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்துள்ளது எனலாம்.
என்ன தான் காரணம்? ஏன் இந்த 20% ஏற்றம்? இந்த ஏற்றம் தொடருமா? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்.. அமெரிக்க அரசு திடீர் முடிவு..!
இன்வெஸ்கோவின் அதிரடி முடிவு
ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரரான இன்வெஸ்கோ, நிறுவனத்தின் குழுவினை மாற்றியமைப்பதற்கான மிகப்பெரிய பெரிய கோரிக்கையினை கைவிட்டுள்ளது. இது அந்த நிறுவனத்தின் குழு மத்தியில் பெரும் ஆறுதலாய் அமைந்துள்ளது. இதற்கிடையில் தான் இப்பங்கின் விலையானது, மதிய அமர்வில் 20 சதவீதம் வரையில் ஏற்றம் கண்டது.
தற்போதைய நிலவரம் என்ன?
எனினும் தற்போது சற்று குறைந்து என்.எஸ்.இ-யில் 2.14 மணி நிலவரப்படி 17.61% அதிகரித்து, 301.15 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 307.25 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 281.65 ரூபாயாகும்.
இதே பிஎஸ்இ-யில் 17.34% அதிகரித்து, 300.45 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 307.25 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 281.65 ரூபாயாகும்.இதன் 52 வார உச்ச விலை 378.60 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்தபட்ச விலை 166.80 ரூபாயாகும்.
இன்வெஸ்கவின் கோரிக்கை
இன்வெஸ்கோ மார்ச் 23 அன்று, ஆறு சுயதீன இயக்குனர்களை சேர்க்க ஒரு அசாதாரணமான பொதுக்குழு கூட்டத்தினை தொடர வேண்டும் என்று கூறியது. ஆனால் ஜீ நிறுவனம் சோனியுடன் இணைவதன் மூலம் இயக்குனர் குழுவினை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மறுசீரமைப்பு இருக்கலாம்
இது குறித்து இன்வெஸ்கோ நாங்கள் இந்த கோரிக்கையை வைத்த பின்னர், ஜீ – சோனியுடன் இணைப்பு ஓப்பந்தத்தில் இணைந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் தற்போதைய நிலையில், ஜீ நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கும் பெரும் சாத்தியம் இருக்கலாம். ஆக இந்த இரு நிறுவனங்களும் இணைக்கப்படும்போது நிச்சயம் குழு வாரியத்தில் மாற்றங்கள் இருக்கலாம். குழு மறுசீரமைக்கப்படலாம். இது இந்த குழுமத்தினை மேற்கொண்டு வலுப்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. இந்த உற்சகத்தில் பங்கு விலையானது நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றது. முதலீட்டாளர்களும் நல்ல லாபத்தில் உள்ளனர்.
zee entertainment share price jump 20% after invesco drops board demand
zee entertainment share price jump 20% after invesco drops board demand/அதிரடியாக 20% ஏற்றம் கண்ட ஜீ என்டர்டெயின்மென்ட்.. முதலீட்டாளர்கள் செம ஹேப்பி!