ஜம்மு காஷ்மீர் பற்றி பாகிஸ்தானில் நடந்த கூட்டத்தில் சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்த கருத்துக்கு இந்தியா ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர், இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதில் மூன்றாவது நாடுகள் தலையிடக் கூடாது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி, பாகிஸ்தானின் இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இந்தியாவை சுட்டிக்காட்டி பேசியிருப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பான விவகாரங்கள் முழுக்க, முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களை சார்ந்தது என்றும், சீனா போன்ற பிற நாடுகள் அது பற்றி கருத்து தெரிவிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் தெரிவித்தார். சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ள நிலையில், இரு தரப்புக்கும் இடையே சூடான கருத்து பரிமாற்றங்கள் நடந்திருப்பது பேச்சுவார்த்தையில் நெருக்கடிகளை ஏற்படுத்த கூடும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாம்: ‘கங்கனா ரணாவத் ஒரு பிரபலமாக இருக்கலாம்… ஆனால்’ நிராகரித்த நீதிபதி சாடல்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM