இந்தி ஆர்ஆர்ஆர் பதிப்பில் கூடுதல் காட்சிகள்

சென்னை: ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், அலியா பட், ஸ்ரேயா நடித்துள்ள பான்-இந்தியா படம், ஆர்ஆர்ஆர். இன்று திரைக்கு வரும் இப்படத்தை ராஜமவுலி இயக்கியுள்ளார். தெலுங்கில் இப்படம் 3 மணி, 2 நிமிடங்கள் ஓடும். இதன் இந்தி பதிப்பு 3 மணி, 7 நிமிடங்கள் ஓடும். கூடுதலாக 5 நிமிட காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. அஜய் தேவ்கன், அலியா பட் சம்பந்தப்பட்ட தெலுங்கில் இணைக்கப்படாத காட்சிகள் இந்தியில் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராஜமவுலி இதுவரை இயக்கிய படங்களில் ஆர்ஆர்ஆர் படம் மட்டுமே அதிக நீளம் கொண்ட படமாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.