இந்த மாணவிகளை அழைத்து ஸ்டாலின் பாராட்டப் போகிறாரா? டாஸ்மாக் மதுவுக்கு எதிராக வெடிக்கும் குரல்கள்

Tamilnadu News Update : கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவிகள் பேருந்தில் பள்ளி சீருடையில் மது அருந்தும் வீடியோ கட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், இந்த வீடியோ பதிவுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், பொன்விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப்பளியில் படித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான மாணவர்கள் தங்களு பகுதியில் இருந்து பள்ளில் பேருந்தில் வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளி முடிந்து பேருந்தில் வீட்டிற்கு சென்ற மாணவிகள் சிலர் பேருந்தில், சென்றுகொண்டிருக்கும்போதே பள்ளி சீருடையுடன் மது அருந்தி அட்டகாசம் செய்துள்ளனர். பேருந்தில் இருந்த ஓட்டுநர் நடத்துனர் உட்பட சக பயணிகள் யாருமே இதை கண்டுகொள்ளாத நிலையில், பேருந்தில் பயணித்த ஒருவர் இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ பதிவு தொடர்ந்து வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், மாணவிகளின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனக் குரல்கள் ஒலித்து வருகிறது. மேலும் இது தொடர்பாக அரசு முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத்தலைவர் மூ.ராஜேஸ்வரி பிரியா, தனது பேஸ்புக் பதிவில்,

நேற்று பார்த்து அதிர்ந்த செய்தி: செங்கல்பட்டு மாவட்டத்தில் பீர் குடித்து கொண்டே மாணவ மாணவிகள் அரசு பேருந்தில் பயணம் செய்கிறார்கள். அரசே மதுக்கடைகளை நடத்துவதால் மாணவ மாணவிகள் அரசிற்கு வருவாய் ஏற்படுத்துகிறார்கள் என்று நாம் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டுமா?.பெற்றவர்கள் வயிறு‌ எரிகிறது.மாணவ சமுதாயத்தை போதைக்கு அடிமையாக்கும்

இந்த ஆட்சி எத்தனை சிறப்பாக நீங்கள் காட்டிகொண்டாலும் அது மலத்தினுள் ஒளிந்து கிடக்கும் இனிப்பிற்கு சமம்.ரூ 40500 கோடி வருமானம் ஈட்ட வேண்டும் என்ற இலக்கை நோக்கி ஓடும் அரசிற்கு

டாஸ்மாக் வருமானம் அதிகமாவது மகிழ்ச்சியான‌ செய்தியே.

அக்கா கனிமொழி அவர்களே அதிமுக ஆட்சியின் போது மது விலக்கு அமல்படுத்தபட்டால் தாங்கள் நடத்தும் மது ஆலைகளை மூடத் தயார் என்று பேசினீர்களே.

தற்போது தங்களது ஆட்சி நடக்கிறது ஆனால் நீங்கள் மது குறித்து வாயே திறக்காமல் மௌனம் காத்து வருகிறீர்கள்.இப்படி ஒரு அரசியல் தேவையா? முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களே கருப்பு சட்டை அணிந்து போராடினீர்களே‌? உங்கள் பேச்சு மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்கானது மட்டுமே தவிர உண்மையானது அல்ல.

அரசு நடத்தும் போதை மறுவாழ்வு மையங்கள் மூன்று மட்டுமே. ஆனால் டாஸ்மாக் கடைகள் 5300க்கும் அதிகம். மக்களின் கல்லீரலை அழுக வைத்து கஜானாவை நிரப்ப வேண்டுமா? வேதனை. வைரல் வீடியோவை பார்த்தால் மாணவர்களை உடனே அழைத்து பாராட்டும் முதல்வர் அவர்களே பேருந்தில் பீர் குடித்து கொண்டே பயணம் செய்த மாணவ மாணவியர்களை அழைத்து அறிவுரை கூறப் போகிறீர்களா? அல்லது அரசிற்கு வருவாயை பெருக்குகிறீர்கள் என்று பாராட்ட போகிறீர்களா?

21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற விதி கூட செயல்படுத்தப்படுவதில்லை. மாறவேண்டியது மக்கள் தான் .நம் அடுத்த தலைமுறையை காக்க நாம் எல்லோரும் சிந்திக்க தொடங்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

 “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.