பிரிட்டன்
குளிருக்கு எந்த அளவுக்கு பெயர் போனதோ, அதேபோன்று இங்குள்ள கட்டட கலை உலக அளவில் பெயர் பெற்றது. இதனை மெய்ப்பிக்கும் வகையில், தலைநதர் லண்டனி்ல் கட்டப்பட்டுள்ள ஒரு வீடு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
லண்டனின் ரிச்மாண்ட் பகுதியில் .முற்றிலும் கண்ணாடிகளை வைத்து கட்டப்பட்டுள்ள இந்த வீடு, இருக்கும் இடம் தெரியாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டிற்கு உள்ளே இருப்பவர்களை வெளியே இருப்பவர்கள் பார்க்க முடியாது. ஆனால் வீட்டின் உரிமையாளர்கள், வெளியே நடக்கும் அனைத்தையும் வீட்டிற்குள் இருந்தவாறு பார்க்க இயலும்.
2015 ஆம் ஆண்டுக்கு முன்புவரை, பிற வீடுகளை போலவே சாதாரணமாக இருந்த இந்த இல்லம், அதன்பின் கைதேர்ந்த கட்டடக்கலை நிபுணர் ஒருவரால் முற்றிலும் கண்ணாடிகளை வைத்து மறுவடிவமைத்தார்.
காண்போரை பிரமிக்க செய்து வரும் இந்த கண்ணாடி வீட்டின் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.