நாகை மாவட்டம் கோடியக்கரையில், இலங்கை அகதிகளின் வருகையை கண்காணிக்கும் வகையில் ரோவர் கிராப்ட் ரோந்து கப்பல் காவல் பணியில் ஈடுபட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியாலும், உணவு தட்டுப்பாடு நிலவி வருவதாலும், அங்குள்ள மக்கள், தமிழகத்திற்கு அகதிகளாக வரக்கூடும் என்பதால் 24 மணி நேரமும் கோடியக்கரையில் கடற்படையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலிலும் நிலத்திலும் ரோந்து பணியை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ரோவர் கிராப்ட் ரோந்து கப்பல் மூலம் கடற்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேப்போல், இலங்கையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் கேரளாவிற்கு அகதிகள் தஞ்சம்புக வாய்ப்புள்ளதால், கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் புதிய படகுகளை பார்த்தால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.