உக்ரைனில் போரின் ஒருபகுதியாக குடியிருப்புகளில் புகுந்து ரஷ்ய துருப்புகள் பெண்களை சீரழித்துவருவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாம் உல போரின் போது ஜேர்மானிய பெண்களுக்கு ஏற்பட்ட நிலை, தற்போது ரஷ்ய துருப்புகளால் உக்ரேனிய பெண்களுக்கு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் உக்ரைனின் சட்டத்தரணி ஜெனரல் இரினா வெனெடிக்டோவா, புடினின் துருப்புக்கள் மீதான நாட்டின் முதல் அதிகாரப்பூர்வ பலாத்கார விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
குடிபோதையில் சிப்பாய் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து, ஒருவரைக் கொன்று, அவரது மனைவியை பலமுறை சீரழித்ததாக வெளியான தகவலையடுத்தே குறித்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாதிப்புக்குள்ளான பெண் மீட்கப்பட்டதுடன், அவருக்கு உரிய மருத்துவ உதவிகளும் அளிக்கப்பட்டுள்ளதாக வெனெடிக்டோவா தெரிவித்துள்ளார்.
மேலும், பிப்ரவரி 24ம் திகதி ரஷ்ய துருப்புகள் உக்ரைனில் ஊடுவிய பின்னர் பலாத்கார வழக்குகள் அதிகரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
உக்ரைன் பெண்கள் மீது தாக்குதல் முன்னெடுத்தவர்கள் அனைவரையும் சட்டத்தின் மீது நிறுத்தப்படுவார்கள் என வெனெடிக்டோவா தெரிவித்துள்ளார்.
1999 மற்றும் 2009 க்கு இடையில் நடந்த இரண்டாவது செச்சென் போரின் போதும் ரஷ்ய துருப்புக்கள் பெண்கள் மற்றும் ஆண்கள் மீதும் பாலிய தாக்குதல் முனெடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.