பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. இந்த நிலையில், `இம்ரான் கான் சரியாக அரசாங்கத்தை வழிநடத்தவில்லை. அதனால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும்’ என சொந்தக் கட்சியினர் தொடங்கி அந்த நாட்டு ராணுவத்தினர் வரை பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதையொட்டி, வருகிற மார்ச் 25-ம் தேதி(நாளை) இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது. இதனால் தனது இம்ரான் கானுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், இம்ரான் கான் அலுவலகம் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “என்ன நடந்தாலும் சரி… நான் ராஜினாமா செய்ய மாட்டேன். சண்டையின்றி சரணடைய மாட்டேன். வஞ்சகர்களின் அழுத்தத்திற்காக நான் ஏன் பதவி விலக வேண்டும்’’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.