ஏப்ரல் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கி விடுமுறை.. தமிழகத்தில் எத்தனை நாள்?

மார்ச் மாதம் முடிய, நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், வரவிருக்கும் ஏப்ரல் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் மாதத்திற்காக விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் மாதத்தில் வார விடுமுறை உட்பட 15 நாட்கள் வங்கி விடுமுறையாகும்.

இதை கவனிச்சீங்களா.. ரஷ்யா – உக்ரைன் போர் கொடுத்த சூப்பர் வாய்ப்பு.. அதுவும் 4 துறைகளில்!

இதன் மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் முன் கூட்டியே தங்களது வங்கி வேலைகளை திட்டமிட்டு செய்து கொள்ள இது பயனுள்ளதாக இருக்கும்.

 வங்கி பொது விடுமுறை நாட்கள்

வங்கி பொது விடுமுறை நாட்கள்

ஏப்ரல் 1 – வங்கிக் கணக்குகளின் வருடாந்திர மூடல் – (அனைத்து மாநிலங்களிலும் விடுமுறை)

ஏப்ரல் 2 – குடி பத்வா/உகாதி விழா/நவராத்திரியின் முதல் நாள்/தெலுங்கு புத்தாண்டு/சஜிபு நோங்கம்பாம்பா (சைரோபா) – பெலாபூர், பெங்களூர், சென்னை, ஹைதராபாத், இம்பால், ஜம்மு, மும்பை, நாக்பூர், பனாஜி மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் விடுமுறை.

ஏப்ரல் 4 – சாரிஹுல்-ராஞ்சியில் விடுமுறை.

ஏப்ரல் 5 – பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்தநாள் – ஹைதராபாத்தில் விடுமுறை.

ஏப்ரல் 14 – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி/ மகாவீர் ஜெயந்தி/ பைசாகி/ தமிழ் புத்தாண்டு/ சைரோபா, பிஜூ விழா/ போஹர் பிஹு – ஷில்லாங் மற்றும் சிம்லாவைத் தவிர மற்ற இடங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

ஏப்ரல் 15 – புனித வெள்ளி / பெங்காலி புத்தாண்டு / ஹிமாச்சல் நாள் / விஷு / போஹாக் பிஹு – ஜெய்ப்பூர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் தவிர மற்ற இடங்களில் விடுமுறை.

ஏப்ரல் 16 – போஹாக் பிஹு – கவுகாத்தியில் விடுமுறை.

ஏப்ரல் 21 – கரியா பூஜை – அகர்தலாவில் விடுமுறை

ஏப்ரல் 29 – ஷப்-இ-கத்ர்/ஜுமாத்-உல்-விடா – ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் விடுமுறை.

 

 வார விடுமுறை நாட்கள்
 

வார விடுமுறை நாட்கள்

ஏப்ரல் 3 – ஞாயிற்றுக்கிழமை

ஏப்ரல் 9 – 2வது சனிக்கிழமை)

ஏப்ரல் 10 – ஞாயிற்றுக்கிழமை

ஏப்ரல் 17 – ஞாயிற்றுக்கிழமை

ஏப்ரல் 23 – நான்காவது சனிக்கிழமை

ஏப்ரல் 24 – ஞாயிற்றுக்கிழமை

 

 தமிழகத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை?

தமிழகத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை?

ஏப்ரல் 2,2022 – தெலுங்கு வருட பிறப்பு

ஏப்ரல் 9, 2022 – இரண்டாவது சனிக்கிழமை

ஏப்ரல் 14, 2022 – தமிழ் புத்தாண்டு

ஏப்ரல் 15, 2022 – புனித வெள்ளி

ஏப்ரல் 23, 2022- 4 வது சனிக்கிழமை

இது தவிர ஏப்ரல் 3 – ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 10 – ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 17 – ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 24 – ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை நாட்களாகும். வார விடுமுறையோடு சேர்த்து மொத்தம் 9 நாட்கள் வங்கி விடுமுறையாகும்.

 

 வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம்?

வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம்?

மேற்கண்ட இந்த விடுமுறை நாட்களில் பணத் தேவை அதிகம் இருக்கலாம். ஆக அதற்கேற்ப முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவது நல்லது. ஏனெனில் இந்த காலகட்டங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆக முன்னரே அதற்கேற்ப தயாராகிக் கொள்ளலாம். செலுத்த வேண்டிய இடத்திலும் முன்கூட்டியே செலுத்திக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

bank holidays april 2022: banks will be closed for up to 15 days: check details

bank holidays april 2022: banks will be closed for up to 15 days: check details/ஏப்ரல் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கி விடுமுறை.. தமிழகத்தில் எத்தனை நாள்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.