ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா கலந்துக் கொள்ளாமல் தவிர்த்து விட்டது.
உக்ரைனில் மனிதநேய நிலவரம் குறித்து ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக ரஷ்யா சீனா உள்பட சில நாடுகள் வாக்களித்தன. ஆனால் இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை.
இதனால் அந்த தீர்மானம் தோல்வியடைந்தது. உக்ரைன் மனிதாபிமான நிதியைத் திரட்டும் இந்த தீர்மானத்தில் ரஷ்யாவின் யுத்தத்தால் நேர்ந்த சேதங்கள் குறித்து குறிப்பிடப்படவில்லை என்பதால் ஐநா.பாதுகாப்பு கவுன்சில் அந்தத் தீர்மானத்தை தோற்கடித்தது.