தென்னாப்பிரிக்க வீரர் ஜுபைர் ஹம்சா ஊக்கமருந்து சோதனைில் சிக்கினார். கடந்த ஜனவரி மாதம் எடுக்கப்பட்ட சோதனையின் முடிவுகள் சமீபத்தில் வெளியானது.
இதில், தடை செய்யப்பட்ட ஃபியூரோஸ்மைடு என்ற ஊக்கமருந்தை அவர் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, வங்கதேசத்துக்கு எதிராக அடுத்த வாரம் நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரிலிருந்து அவர் தாமாகவே முன்வந்து விலகியதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
26 வயதாகும் ஹம்சா, இதுவரை 6 டெஸ்ட் ஆட்டங்களிலும் ஒரு நாள் ஆட்டத்திலும் தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடியிருக்கிறார்.
ஐசிசி தரவரிசை: ஆல்-ரவுண்டரில் நம்பர் 1 வீரர்
ஐ.சி.சி வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 3 இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் 10 இடங்களில் உள்ளனர். அதில் ரோகித் சர்மா, 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்திற்கு தள்ளப்பபட்டுள்ளார். விராட் கோலி 9-வது இடத்திலும் ரிஷப் பண்ட் 10-வது இடத்திலும் உள்ளனர்.
தொடர் நாயகன், ஆட்ட நாயகன் விருதை வென்ற வங்கதேச வீரர்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று வெற்றி பெற்றது வங்கதேச அணி.
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த தென்னாப்பிரிக்கா, வங்கதேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடக்க ஆட்டக்காரர் மலான் மட்டுமே 39 ரன்கள் எடுத்தார்.
இந்த ஆட்டத்தில் வங்கதேச வேகப்பந்து வீச்சாலர் டஸ்கின் அகமது 9 ஓவர்களை வீசி 5 விக்கெட்டுகளை வாரி சுருட்டினார்.
ஆட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த டஸ்கின் அகமதுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. ஒரு நாள் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியதற்காக தொடர் நாயகன் விருதையும் அவர் தட்டிச் சென்றார்.
விசா காலதாமதத்தால் முதல் ஆட்டத்தை மிஸ் செய்யப்போகும் வீரர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயீன் அலி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். வருகிறது 26-ஆம் தேதி சிஎஸ்கே-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
இந்நிலையில், மொயீன் அலி இன்னும் இந்தியா வராத காரணத்தால் அவர் இந்த ஆட்டத்தை மிஸ் செய்வார் என்று தெரிகிறது.
விசா இன்னும் கிடைக்காத காரணத்தினால் அவரால் உரிய நேரத்துக்கு இந்தியா வர முடியவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் 2022: கவனம் ஈர்க்க காத்திருக்கும் 5 இந்திய வீரர்கள் பட்டியல் இதுதான்!
இந்தியா வந்த பிறகு அவர் 3 நாள்கள் தன்னை தனிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதாலும் அவரால் நிச்சயமாக முதல் ஆட்டத்தில் விளையாட முடியாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“