லண்டன் பிரிட்டனில், கண்ணுக்கு தெரியாதபடி, கண்ணாடிகளை வைத்து கட்டப்பட்டுள்ள வீடு ஒன்று, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனில், தனித்துவத்துவமாக உள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.இந்நிலையில், தலைநகர் லண்டனின் ரிச்மாண்ட் பகுதியில் கட்டப்பட்டு உள்ள ஒரு வீடு, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.முற்றிலும் கண்ணாடிகளை வைத்து கட்டப்பட்டுள்ள இந்த வீடு, இருக்கும் இடம் தெரியாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கு உள்ளே இருப்பவர்களை, வெளியே இருந்து பார்க்க முடியாது. எனினும், வீட்டின் உரிமையாளர்கள், வெளியே நடக்கும் அனைத்தையும் வீட்டிற்குள் இருந்தவாறு பார்க்க முடியும். இந்த வீடு, 2015ம் ஆண்டிற்கு முன்பு வரை, சாதாரண வீடாகவே இருந்துள்ளது.பின், கட்டடக்கலை நிபுணர் அலெக்ஸ் ஹா என்பவர், இந்த வீட்டை கண்ணாடிகளை வைத்து மறுவடிவமைத்தார். இந்த கண்ணாடி வீட்டின் புகைப்படங்கள், சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
லண்டன் பிரிட்டனில், கண்ணுக்கு தெரியாதபடி, கண்ணாடிகளை வைத்து கட்டப்பட்டுள்ள வீடு ஒன்று, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனில், தனித்துவத்துவமாக உள்ள
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.