கிரிப்டோகரன்சிக்கு நாளுக்கு நாள் ஆதரவு கரங்கள் பெருகிக் கொண்டே வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு தான் அரபு நாணய நிதியம் அதன் பொருளாதார அமைப்பில் டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.
இதற்கிடையில் அமெரிக்கா, ரஷ்யா, மலேசியா என பல நாடுகளும் கிரிப்டோகரன்சியை சட்டபூர்வமாக்குவது குறித்து ஆலோசித்து வருகின்றன.
இந்த நிலையில் ப்ளோரிடா கவர்னர் உலக நாடுகளின் கவனத்தினை ஒரே அறிவிப்பில் தன் பக்கம் திருப்பியுள்ளார் எனலாம்.
30 நாளில் 1000% லாபத்தை கொடுத்த புதிய கிரிப்டோ.. மிஸ் பண்ணிடாதீங்க..!

கிரிப்டோ மூலம் வரி செலுத்தலாம்
ப்ளோரிடாவின் கவர்னர் வணிகங்களில் இருந்து செலுத்தப்படும் வரியினை கிரிப்டோவாக ஏற்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த கிரிப்டோகரன்சிகளில் அதிக ஆர்வம் காட்டாத நிலையில், தற்போது பைடன் அரசு இதில் ஆர்வம் காட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிட்காயினையும் ஏற்றுக் கொள்வோம்
மொத்தத்தில் இந்த அறிவிப்பானது கிரிப்டோ முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தலாம். முதலீடுகளை செய்ய தூண்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாங்கள் பிட்காயினை ஏற்றுக் கொள்வோம். நாங்கள் ப்ளோரிடாவில் பணம் செலுத்துவதற்காக இதனை செய்து வருகின்றோம். ஆக ப்ளோரிடாவில் வணிகம் செய்பவர்கள், கிரிப்டோகரன்சி மூலம் வரி செலுத்த விரும்பினால் அதனை ஏற்றுக் கொள்வோம்.

பிட்காயினில் பகுதி சம்பளம்
ப்ளோரிடா கிரிப்டோவுக்கு ஆதரவாக இருந்து வரும் நிலையில், மியாமின் மேயரான பிரான்சிஸ் சுரேஸ், பணவீக்கத்திற்கு எதிராக தனது சம்பளத்தில் ஒரு பகுதியை பிட்காட்யினில் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது மட்டும் அல்ல, அமெரிக்காவின் பிற மாநிலங்களும் கிரிப்டோவை ஏற்றுக் கொள்ள தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
அதெல்லாம் சரி இன்று முக்கிய கிரிப்டோக்களின் நிலவரம் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

பிட்காயின் மதிப்பு
சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், கிரிப்டோகரன்சிகள் முக்கிய முதலீடுகளாக மாறி வருகின்றன. கிரிப்டோகரன்சிகளில் சந்தை மதிப்பில் முதன்மை கரன்சியாக இருந்து வரும் பிட்காயின் மதிப்பானது, தற்போது 2.24% அதிகரித்து, 42,992.42 டாலராக காணப்படுகின்றது.
கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 43,468.40 டாலர்களாகும். இதே இதன் குறைந்தபட்ச விலை 41,901.59 டாலர்களாகும். நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 6.99% சரிவில் தான் காணப்படுகிறது.

எத்திரியம் மதிப்பு
எத்தரியத்தின் மதிப்பானது தற்போது 3.31% அதிகரித்து, 3050.63 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 3080 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 2940.49 டாலர்களாகும். நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 17.04% வீழ்ச்சி கண்டுள்ளது.

கார்டானோ நிலவரம்
கார்டானோ மதிப்பானது 16.96% அதிகரித்து, 1.15 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.15 டாலராகவும், இதே குறைந்தபட்ச மதிப்பு என்பது 0.97 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 13.59% சரிவினைக் கண்டுள்ளது. இதன் புதிய வரலாற்று உச்சம் 3.10 டாலர்களாகும்.

எக்ஸ்ஆர்பி நிலவரம்
எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 1.32% அதிகரித்து, 0.835901 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.85 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.82 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 3.40 டாலராகும். இது நடப்பு ஆண்டில் 1.28% ஏற்றம் கண்டுள்ளது.

லைட்காயின் தற்போதைய நிலவரம்
லைட்காயின் மதிப்பானது 2.49% அதிகரித்து, 122.38 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 123..41 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 119.15 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 16.51% சரிவைக் கண்டுள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 413.47 டாலராகும்.

யுனிஸ்வாப் மதிப்பு
யுனிஸ்வாப் மதிப்பானது 5.32% அதிகரித்து, 10.36 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 10.41 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 9.73 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 39.19% சரிவில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 45.01 டாலராகும்.

போல்கடோட் நிலவரம் என்ன?
போல்கடோட் மதிப்பானது தற்போது 2.26% அதிகரித்து, 20.74 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 21.23 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 20.30 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 22.48% சரிவில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 55.11 டாலராகும்.
Florida governor says state to accepting taxes in crypto from business
Florida governor says state to accepting taxes in crypto from business/கிரிப்டோகரன்சிக்கு பெருகும் ஆதரவு.. ப்ளோரிடா எடுத்த அதிரடி முடிவு..!