கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற எருது விடும் விழாவில் 300 காளைகள் பங்கேற்றன.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு மாற்றாக எருதுவிடும் விழா கிராமங்கள் தோறும் பாரம்பரியமாக நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி அருகே உள்ள குட்டூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் திருவிழாவினை முன்னிட்டு 2ஆம் ஆண்டு எருதுவிடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் வேலூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம், கர்நாடக மாநிலம் பங்காருப்பேட்டை, போன்ற இடங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
இதையடுத்து வாடி வாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக இரண்டு சுற்றுகளாக ஓட விடப்பட்டது குறிப்பிட்ட நொடியில் 125 மீட்டர் தூரம் கடந்து இலக்கை எட்டும் காளை தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசை வெல்ல இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடிய எருதுகளை இளைஞர்கள் பெண்கள் பொதுமக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM