கூட்டணி கட்சிகள் விலகல் இம்ரானுக்கு நெருக்கடி| Dinamalar

இஸ்லாமாபாத்:நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கான் அரசின் மீது சமீபத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்தன. இதற்கான ஓட்டுப்பதிவு சில நாட்களில் நடைபெற உள்ளது.

இதில் அரசுக்கு எதிராக ஓட்டளிப்போம் என, ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்- – இ – -இன்சாப் கட்சி எம்.பி.,க்கள் 24 பேர் அறிவித்து உள்ளனர். இதற்கிடையே, ஆளும் கூட்டணியில் இருந்து முத்தாஹிதா குவாமி, பாக்., முஸ்லிம் லீக் -குவைட் மற்றும் பலுசிஸ்தான் அவாமி கட்சிகள் வெளியேற முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.இதனால், பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.