தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, பள்ளிகள் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன். இந்நிலையில், கல்வி கட்டணம் செலுத்ததாத மாணவர்கள் மீது சில தனியார் பள்ளிகள் நடவடிக்கை எடுப்பதாக பள்ளி கல்வித் துறைக்கு புகார் வந்துள்ளது.
அதனடிப்படையில், கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்கவைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பிய கடித்ததில், கல்வி கட்டணத்தை செலுத்ததாத மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியேற்றவில்லை, அவர்களின் பெற்றோர்களை தரக்குறைவாக பேசவில்லை என பள்ளி முதல்வர், செயலாளர், தாளாளர் ஆகியோர் கையெழுத்திட்டு, முதன்மைக் கல்வி அலுவலரிடம் கடிதத்தை ஒப்படைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கல்விக்கட்டணம் தொடர்பாக தனியார் பள்ளிகள் மீது புகார் வந்தால் அந்த பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.