தட்சிண கன்னடா,-கத்ரி மஞ்சுநாதேஸ்வரா கோவில் டிரஸ்டி நிவேதிதா ஷெட்டி, உண்டியல் பணத்தை கையாடல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். பொய் பிரசாரம் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நகர போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளார்.தட்சிண கன்னடா மங்களூரு கத்ரியில் மஞ்சுநாதேஸ்வரா கோவில் உள்ளது. இதன் டிரஸ்டியாக இருப்பர் நிவேதிதா ஷெட்டி. இவர், கோவில் உண்டியல் பணத்தை கையாடல் செய்துள்ளதாக, சமூக வலைதளத்தில் செய்திகள் பரவின.இது குறித்து நிவேதிதா ஷெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:கோவில் உண்டியல் பணத்தை கையாடல் செய்ததாக சமூக வலைதளத்தில் பரவிய செய்தியில் உண்மையில்லை. எனவே, பொய் குற்றச்சாட்டை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன்.கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர் புருஷோத்தம், கோவில் நிர்வாக கமிட்டி தலைவராக திட்டமிட்டார். அவர் தலைவராக விரும்பாத தான், ஏ.ஜெ.ஷெட்டி என்பவருக்கு ஆதரவாக இருந்தேன்.இதனால் கோபமடைந்த புருேஷாத்தம், என்னை பதவியிலிருந்து விலக நெருக்கடி கொடுத்தார். அத்துடன், பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். இதை நான் பெரிதாக நினைக்கவில்லை.தற்போது மீடியாவிலும், சமூக வலைளத்திலும் பொய் செய்தி பரப்பி, என கவுரவத்தை கெடுக்க முயற்சிக்கிறார்.தேஜ்பால் சுவர்ணா என்பவருடன் இணைந்து, புருேஷாத்தம், பொய் செய்தி பரப்பியுள்ளார். அவ்விருவர் மீதும் மானநஷ்ட வழக்கு பதிவு செய்துள்ளேன்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement