சிம்பு – நயன்தாரா மோதல் ? பரபரக்கும் கோலிவுட்.!

நடிகர் சிம்பு மற்றும்
நயன்தாரா
இருவரும் முன்னாள் காதலர்கள். 2006 ஆம் ஆண்டு சிம்பு நடித்து இயக்கிய
வல்லவன்
படத்தில் கதாநாயகியாக நடித்தார் நயன்தாரா. அப்போது இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இருப்பினும் சில கருத்து வேறுபாட்டின் காரணமாக வல்லவன் படம் வெளியாவதற்குள் இவர்கள் காதல் முறிந்தது.

அதன் பின் இருவரும் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தினர். இதைத்தொடர்ந்து காதல் முறிவுக்கு பிறகு நயன்தாரா மற்றும் சிம்பு இது நம்ப ஆளு படத்தில் சேர்ந்து நடித்தனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதை செய்ய பிச்சை கூட எடுப்போம் : விஷால்

தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் வருகின்றன. அதே சமயம் சிம்புவிற்கு திருமணம் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது..

மஹா

இந்நிலையில் தற்போது சிம்பு மற்றும் நயன்தாரா இருவரும் மோதலில் இறங்கியுள்ளது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்னேஷ் சிவன்
இயக்கத்தில்
விஜய் சேதுபதி
மற்றும் நயன்தாரா,
சமந்தா
ஆகியோர் நடித்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

இப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதே தேதியில் சிம்பு மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவான மஹா திரைப்படமும் வெளியாவதாக தகவல்கள் வந்துள்ளன. எனவே ஒரே நேரத்தில் சிம்பு மற்றும் நயன்தாரா படங்கள் மோதவுள்ளதால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு நிலவிவருகிறது.

சிம்பு – நயன்தாரா

அதே வேளையில் சிம்பு மற்றும் நயன்தாரா படங்கள் ஒரே நாளில் வெளியாவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வலிமை படத்தின் உண்மையான வசூல் எவ்வளவு தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.