சிறு, குறு, நடுத்தர தொழில் மேம்பாட்டுக்கு ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி

டெல்லி: சிறு, குறு, நடுத்தர தொழில் மேம்பாட்டுக்கு ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். பாரம்பரிய, பூர்வீக கலைகள், கைவினை பொருட்களை உலக சந்தையில் காட்சிப்படுத்தி விற்பனை அதிகரிக்க நடவடிக்கை என்ன என்பது குறித்து மக்களவை எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். பாரம்பரிய, பூர்வீக கலைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை உலகச் சந்தையில் காட்சிப்படுத்தி விற்பனையை அதிகரிக்கவும், மேம்படுத்தவும் ஒன்றிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை உலக சந்தையில் காட்சிப்படுத்த ஒன்றிய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா எனவும், எனில் அதற்காக வகுக்கப்பட்ட திட்டங்களின் பட்டியல் மற்றும் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பதை தெரியப்படுத்தவும் என கேள்வி எழுப்பினார். ஆன்லைன் விற்பனையால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்தித்த பாதிப்புகள் குறித்து ஒன்றிய அரசு ஏதேனும் ஆய்வுகளோ அல்லது துறை வல்லுநர்களிடம் கலந்தாலோசனையோ மேற்கொண்டுள்ளதா என கேள்வி எழுப்பினார். கொரோனா பெருந்தொற்று நாட்களில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலில் தனி நிபுணத்துவம் பெற்ற பாரம்பரிய, பூர்வீக கலைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்ற தொழில்கள் சந்தித்த இன்னல்கள் குறித்து ஒன்றிய அரசு ஏதேனும் ஆய்வு மேற்கொண்டுள்ளதா என கேள்வி எழுப்பினார். பாரம்பரிய, பூர்வீக கலை மற்றும் கைவினைப் பொருட்களில் நிபுணத்துவம் பெற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான ஆன்லைன் சந்தை மற்றும் டிஜிட்டல் விற்பனை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அல்லது ஊக்குவிக்க ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.