மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கிய சீன விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்ட நிலையில் அது விமானி அறையில் இருக்கும் குரல் பதிவாகும் பெட்டி என்றும் மிகுந்த சேதமடைந்துள்ள பெட்டியில் பதிவான குரல்களை மீட்கும் முயற்சியில் தொழில்நுட்பவியலர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் சீனா சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரு நாட்களுக்கு முன் 132 பயணிகளுடன் சென்ற சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் குவாங்சி மலை பகுதியில் விழுந்து சுக்கு நூறாக நொருங்கியது. விமானத்தின் இரு கருப்பு பெட்டிகளில் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில் கிடைத்தது விமானி அறையில் இருக்கும் குரல் பதிவு பெட்டி என்றும் விபத்திற்கு முன் என்ன நடந்தது என அறிய பெட்டி பீஜிங்கில் உள்ள ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.