மும்பை,
ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியுள்ளார். இதனை தொடர்ந்து புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்
கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும், வீரராக அணியில் தோனி தொடர்வார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஜடேஜாவுக்கு முன்னாள் சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்
இது குறித்து ரெய்னா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;
சென்னை போன்ற அணியின் கேப்டன் பொறுப்புக்கு இவரை (ஜடேஜா) விட சிறந்த வீரரை நினைத்து பார்க்க முடியாது . வாழ்த்துக்கள் ஜடேஜா .இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்