சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் மாலா மற்றும் சவுந்தர் ஆகியோரை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஒதுக்கபட்ட 75 நீதிபதிகள் பதவிகளில் 16 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பும் முயற்சியாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களாக உள்ள 6 பேரை நீதிபதிகளாக நியமிப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி பரிந்துரைத்தது.அதன்படி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான என்.மாலா, சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு, எஸ்.சௌந்தர், அப்துல் ஹமீத், ஆர்.ஜான் சத்யன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் மாலா மற்றும் சவுந்தர் ஆகியோரை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்களின் பதவிக்காலம் பதவியேற்றதில் இருந்து இரண்டாண்டுகள் ஆகும்.
இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்ததுடன் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 14 ஆக குறைந்துள்ளது. மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM