கேரள மாநிலம் கண்ணூர் அடுத்த தளிப்பறம்பு பகுதியில் சைக்கிளில் அதிவேகமாக சாலையை கடக்க முயன்ற சிறுவன் நூலிழையில் கோர விபத்தில் இருந்து தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
மண் சாலையில் அதிவேகமாக சைக்கிளில் வந்த சிறுவன் எங்கும் இடைநிறுத்தம் இல்லாமல் சாலையைக் கடக்க முயன்ற நிலையில் எதிர் வந்த இரு சக்கர வாகனத்தில் மோதி சில அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டான்.
சாலையில் விழுந்த சிறுவனின் சைக்கிள் மீது நொடிப் பொழுதில் பேருந்து ஏறிச் சென்றதில் சைக்கிள் அப்பளம் போல் நொறுங்கியது. பைக் மீது மோதி சிறுவன் தூக்கி வீசப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.