இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ தனது சேவை தரத்தையும், வாடிக்கையாளர் எண்ணிக்கையும் உயர்த்த சமீபத்தில் சோமேட்டோ இன்ஸ்டென்ட் என்னும் 10 நிமிட டெலிவரியை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்தது.
இந்த மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் அரசு அமைப்புகள் மத்தியிலும் பல கேள்விகளை எழுப்பியது. இதன் வாயிலாகச் சென்னை போக்குவரத்துப் போலீஸ் துறை இந்த 10 நிமிட டெலிவரியின் செயல் முறை, டெலிவரி செய்பவரின் பாதுகாப்பு ஆகியவற்றைக் குறித்துக் கேள்வி கேட்ட முடிவு செய்துள்ளது.
ரஷ்யா உடன் வர்த்தகம் செய்ய 3 புதிய ஏற்றுமதி வழிகள்.. உலக நாடுகளின் தடை வீணா..?!
மேலும் சமுக வலைத்தளத்தில் சோமேட்டோ நிறுவனம் குறித்துச் சமுக வலைத்தளத்தில் தரமான பல மீம்கள் டிரென்டாகி வருகிறது.

10 நிமிட டெலிவரி
ஏற்கனவே ஆன்லைன் டெலிவரி செய்யும் ஊழியர்கள் பல காரணங்களுக்காக வாகனங்களை வேகமாகவும், சாலை விதிகளை முறையாகப் பின்பற்றாமலும் வாகனங்களை ஓட்டுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் 10 நிமிட டெலிவரி அறிமுகம் செய்தால் டெலிவரி பார்ட்னர்கள் இப்படித் தான் சாலையில் பறப்பார்கள்.

கடுமையான பாதிப்பு
இந்தியாவில் எந்தொரு நகரமாக இருந்தாலும் கட்டாயம் இந்தச் சோமேட்டோ 10 நிமிட டெலிவரி மூலம் கடுமையான பாதிப்பு ஏற்படும். மேலும் சோமேட்டோ தேவையில்லாமல் டெலிவரி ஊழியர்கள் மீது ப்ரெஷர் போடுகிறது. இது சாலை பாதுகாப்பை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பிளாஷ்
சோமேட்டோ டெலிவரி செய்யப் புதிதாக இவரைதான் நியமித்துள்ளது எனப் பிளாஷ் போட்டோவை பதிவிட்டு உள்ளனர்.

இதுதான் இந்தியா
10 நிமிட ஆம்புலன்ஸ் சேவை?
10 நிமிட அரசு பணிகள் முடிவடைகிறதா?
10 நிமிட தீயணைப்பு சேவை?
10 நிமிட போலீஸ் வருகிறார்களா?
10 நிமிடத்தில் ரீபண்ட் கிடைக்குமா? கட்டாயம் இல்லை 4-7 வர்த்தக நாட்கள் தேவை.
ஆனால் 10 நிமிட உணவு/மளிகை சேவைகள் கிடைக்கும்.

முட்டாள்தனமான யோசனை
10 நிமிடத்தில் உணவு டெலிவரி மூலம் டெலிவரி ஊழியர்களை தேவையில்லாமல் ஏன் அவசரப்படுத்த வேண்டும்???
இது முட்டாள்தனமான யோசனை. இப்படி டெலிவரி செய்தாலும், வாடிக்கையாளர் வெறும் உணவு இப்படித் தான் இருக்கும்.

40 ரூபாய் நஷ்டம்
இந்த 10 நிமிட டெலிவரியில் எந்த வகையான உணவுகளைப் பெற முடியும் எனச் சோமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல்-யிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பிரெட் ஆம்லெட், போஹா, காபி, டீ, பிரியாணி, மோமோஸ், போன்றவற்றைப் பெற முடியும் எனக் கூறினார்.
இதற்குச் சுப்ரீம் லீடர் என்ற டிவிட்டர் வாசி ஒருவர்
போஹா – 25
பேக்கிங் கட்டணம் – 15
டெலிவரி கட்டணம் – 15
ஜிஎஸ்டி – 5
டிப்ஸ் – 5
மொத்தம் —65
போஹா சாப்பிட கொஞ்சம் தூரம் நடந்தால் – 1000 ஸ்டெப்ஸ் மற்றும் 50 கலோரிகளை எரிக்க முடியும்.
Zomato trolled over zomato instant 10 minute delivery
Zomato trolled over zomato instant 10 minute delivery சோமேட்டோவை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்.. கல கல மீம்ஸ்..!