புதுடெல்லி :
டெல்லியில் உள்ள 3 மாநாகராட்சிகளுக்கு ஒருங்கிணைக்கும் மசோதாவுக்கு மத்திய மந்திரி சபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதனிடையே மசோதாவின் மூலமாக மாநாகராட்சி தேர்தலை ஒத்திவைக்க மத்திய அரசு முயல்வதாக டெல்லியில் ஆளும் ஆம்ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து டெல்லி முதல்-மந்திரியும், ஆம்ஆத்மி கட்சியின் தலைவருமான கெஜ்ரிவால் கூறியதாவது:-
பா.ஜ.க., இப்போது டெல்லி மாநகராட்சி தேர்தலை ரத்து செய்ய முயன்று வருகிறது, எதிர்காலத்தில் மாநில மற்றும் தேசிய அளவிலான தேர்தல்களிலும் இதேபோன்று செய்யப்படலாம். பா.ஜ.க. உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி என்று கூறுகிறது, இருப்பினும் ஆம்ஆத்மி போன்ற சிறிய கட்சி மற்றும் டெல்லியின் சிறிய மாநகராட்சி தேர்தலை கண்டு பயப்படுகிறது. சரியான நேரத்தில் மாநகராட்சி தேர்தலை நடத்தி, தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க.வுக்கு நான் சாவல் விடுகிறேன். அப்படி நடந்து விட்டால் நாங்கள் அரசியலை விட்டே விலகி விடுகிறோம்.
இதையும் படிக்கலாம்…உக்ரைனில் இருந்து வெளியேற மறுக்கும் இந்திய கன்னியாஸ்திரிகள்