சென்னை:
உக்ரைன்- ரஷியா போர் காரணமாக கடந்த மாத இறுதியில் தங்கம் விலை 40 ஆயிரத்தை தொட்டது. அதன்பின்னர் தங்கம் விலை சற்று குறைந்தாலும் ஒரே நிலையில் இல்லாமல் இருந்து வருகிறது . தினமும் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.
ஆனால் கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று கிராம் ரூ.4,794 ஆக இருந்த தங்கத்தின் விலை இன்று 37 ரூபாய் உயர்ந்து 4,831-ஆக விற்பனையாகிறது.
பவுன் ரூ.38,352-ல் இருந்து ரூ.38,648ஆக அதிகரித்து உள்ளது. ஒரேநாளில் தங்கம் பவுனுக்கு ரூ.296 உயர்ந்து இருக்கிறது.
இதே போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்தது. கிராம் ரூ.72.40-ல் இருந்து ரூ.72.80 ஆகவும் ஒரு கிலோ ரூ.72,400-ல் இருந்து ரூ.72,800 ஆகவும் உயர்ந்து உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்… சாக்கடையை சுத்தம் செய்த ஆம் ஆத்மி கவுன்சிலருக்கு பாலாபிஷேகம் செய்த மக்கள்