ஊடகங்களில் கட்சிகள் மோதல்!சோழர் காலம் முதல் இருக்கும் தங்க நகரின் பெருமைக்கு அவர் கட்டின சிவாலயங்கள் சாட்சியாக உள்ளன. அத்தகைய நகரில் தேசியக் கட்சிகளில் எம்.பி.,யாகவும், மாநில கட்சி உட்பட தேசிய கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏ.,க்களும் பதவிகளில் இருந்து போறாங்க.அதனால் தனிப்பட்ட ஒரு கட்சியின் கோட்டையென யாரும் முத்திரை பதிக்க விடுவதில்லை.மக்கள் பிரதிநிதிகளும் சொல்லும் படியாக தங்களின் ‘சாதனை’களாக குண்டும் குழியுமாக மாறிவிட்ட சாலைகளை கவனிக்கலையே…மருத்துவமனைகளில் மாரடைப்புக்கு, சிறுநீரக கோளாறுக்கு, புற்று நோய்க்கு, மருத்துவ வசதியே இல்லை. அவசர சிகிச்சைக்கு ஐ.சி.யு., வசதியும் இல்லையே. இதுக்கு தானா அசம்பிளிக்கும், செங்கோட்டைக்கும் மக்கள் பிரதிநிதிகள் இருக்காங்க…அசம்பிளி தேர்தல் நெருங்குவதால், 10 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள் என ஒரு தரப்பிலும், நான்கு ஆண்டில் நீங்கள் என்ன செய்தீர்களென இன்னொரு தரப்பிலும் வாக்குவாதம் சமூக ஊடகங்களில் வார்த்தை மோதல் விளையாட்டு நடத்துறாங்க!பாதிப்பு ஏற்படுத்தாத பூக்காரர்!’பெமல்’ தொழிற்சாலையில் 7,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்த போது, அவர்கள் குடியிருக்க சொகுசான குடியிருப்புகளை ஏற்படுத்தினாங்க. குடிநீர், சாலைகள், கால்வாய், மின்விளக்கு வசதிகள், சுகாதார வசதிகள் செய்து கொடுத்தாங்க. வீடுகள் பழுதடைந்தால் சீரமைத்தனர்.ஆனால், 70 சதவீதம் தொழிலாளர் ‘ரிட்டையர்ட்’ ஆகிவிட்டதால், குடியிருப்பு வீடுகள் எல்லாம் காலியாகி, சீர்கெட்டு சீரழிந்து புற்று, புதர் நிறைந்து, சுகாதாரம் இல்லாமல் சிதைந்து வருது. இதுக்குதானா பல்லாயிரம் கோடி பாழாக்க செலவிட்டாங்க…குடியிருந்த தொழிலாளர்களுக்கே குறைந்த கட்டணத்துக்கு வாடகை விட்டிருக்க லாமேன்னு ரிட்டையர்ட் ஆனவங்க சொல்றாங்க.பெமல் குடியிருப்புகள் கவலைக்கிடமாக மாறி வருது. தரைமட்டமாக்கப் போறாங்களோன்னு சந்தேகம் வருது!மிரட்டினால் ‘எக்ஸ்’ ஆகிடுவாங்க!அரசியலில் ஓய்வு பெற்ற பின்னும் அரசியலில் அதிகமா சம்பாதிக்கிறவரு பூக்காரர் தான்னு கணக்கு பேசுது. அரசியலில் சம்பாதிக்கும் வித்தை எப்புடின்னு அவர் நல்லாவே தெரிந்து வைத்திருக்கிறாராம். பூக்காரர் மாஜி ஆகிவிட்டப் பிறகும் அவரின் வேலைகள் அரசில் தடையில்லாமல் ஓ.கே., ஆகுதாம்.இவரால் சாதாரண நடுத்தர மக்களுக்கு சிறு பாதிப்பும் ஏற்பட்டதில்லையாம். அரசியலில் எதிர்க் கட்சித் தொண்டர்களுக்கு சிறு மனஸ்தாபத்தையும் உருவாக்கியதில்லையாம்.கோல்டன் தொகுதியில் சும்மாவே போட்டுக் கொடுத்து காக்கிகளை வைத்து மிரட்டி, ஸ்டேஷன், சிறை, கோர்ட்டு என அல்லல் பட வைத்தவங்க ‘எக்ஸ்’ ஆகிட்டாங்களே .இதனை புரிஞ்சிக்கிட்டு மற்றவர்களை விட எவ்வளவோ தாம் மேலென பெரிசாபேசி அன்பால் சாதிக்க பூ காரர் தயார் ஆகிட்டாராம்.கட்சியின் துாண்களை காணலையே!ஒவ்வொரு கட்சியிலும் ‘பில்லர்கள்’ ஒண்ணொன்னா காணாமல் போய் கொண்டிருக்குது. இதன் விளைவால வெற்றி, தோல்விகளை, போட்டியிடுவதற்கு முன்னதாகவே தெரிந்து கொள்கிறவர் தான் அறிவாளி.ஆனால், சில மேதாவிகள் பில்லர்களை இழந்தும், பழைய கம்பீர பேச்சை முதலீடாக வைத்து, ஓட்டுகள் தானாக வந்திடும்னு தரையில் நீச்சலடிக்கிறாங்க.வங்கி லோன் ஆயுதமும் வெற்றிக்கு பாதையாக அமையும்னு கைகாரர் நம்பி இருக்கிறாரு. அவர் கிராம ஓட்டுகளே போது மென சிட்டிக்காரர்களை அலட்சியமா நினைப்பதாக, நகர தரப்பில் பேச்சும் இருக்குது.முகவரியை தொலைத்த படி புல்லுக்கட்டு கட்சி அடையாளம் தெரியவில்லை. இருந்தாலும் இதன் ஆதரவை ஒரு கட்சி எதிர்நோக்கி இருக்குதாம். 1994 தேர்தல் முடிவுப் போல் மாறபோகுதுன்னு அவங்க மனக்கணக்கு சொல்லுதாம்!
Advertisement