தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-2023-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த 18ஆம் தேதியும், வேளாண் நிதிநிலை அறிக்கை 19ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர், பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது. அதன்படி தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்றும் நடைபெற்றது. அப்போது பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “தமிழகம் `ஏழை மாநிலம் அல்ல, வளர்ந்த மாநிலம்” என கூறினார்.
இதுதொடர்பாக நிதியமைச்சர் அளித்திருக்கும் தகவலில், “தமிழகத்தில் உயர்கல்வி பெற்றவர்கள் விகிதம் 52%-ஆக உள்ளது. தமிழகத்தில் 75% மேல் சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் 66% வீடுகளில் இருசக்கர வாகனம் இருக்கிறது. தமிழக அரசுக்கு நியமிக்கப்பட்ட பொருளாதார ஆலோசனை குழு ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் பணியாற்றுகிறது. அனைவரின் கருத்துக்கும் மதிபளித்து தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படுகிறது. கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை முடிவாகிவிட்டது” எனக் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்தி: கடந்த ஆண்டைவிட 30% அதிக வீட்டுக்கடன் வழங்கிய ஹெச்.டி.எஃப்.சி வங்கி… காரணம் இதுதான்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM