சென்னை: தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்தாமல் முறையாக பின்பற்ற வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கம்பர் விழாவை முன்னிட்டு சென்னை அண்ணா சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பர் திருவுருவ சிலைக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். pபன்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், தமிழக அரசு சார்பில் கம்பர் விழாவை முன்னிட்டு மரியாதை செலுத்தப்பட்டது. கம்பர் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் புலமை வாய்ந்தவர்.அவரின் கவி திறமையை உலகம் முழுக்கும் அறிவார்கள்.
தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்தாலும் அண்டை மாநிலங்கள், நாடுகளில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது என்றவர், அதனால், தமிழக மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்தாமல் முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். மத்திய அரசு கொரோனா கட்டுப்பாடு களை இந்த மாதத்துடன் முழுமையாக விலக்கிக்கொள்ள உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ளது. பெரிய அளவில் கட்டுப்பாடுகள் எதுவும் தற்போது தமிழகத்தில் இல்லை என்றாலும், முதல்வர் தலைமையில் உயர் மட்ட குழு கூட்டம் நடத்தி தற்போது உள்ள ஓரிரு கட்டுப்பாடுகளையும் தளர்த்தி கொள்வதற்கு குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்தாலும் அண்டை மாநிலங்கள், நாடுகளில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது என்பதை சுட்டிக்காட்டியவர், நாம் இன்னும் முழு அளவில் தொற்றில் இருந்து மீண்டு வரவில்லை அதனால் இன்னும் சில காலம், தமிழக மக்கள், அரசின் கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்தாமல் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.
இந்த வாரம் சனிக்கிழமை 26 வது மெகா தடுப்பூசி முகாம் 50 அயிரம் இடங்களில் நடைபெற இருக்கிறது, இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் கூறினார்.