தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

2022-2023-ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை 18-ந் தேதியும், வேளாண் நிதிநிலை அறிக்கை 19-ந் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் கடந்த மூன்று நாட்களாக பேரவையில் நடைபெற்றது. இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

இதனிடையே, பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெற்றதை ஒட்டியும், முதலமைச்சர் ஆன பிறகு முதன்முறையாக அரசுமுறைப் பயணமாக வெளிநாடு செல்வதை ஒட்டியும் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.