சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவுபெற்றதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 18ந்தேதி தொடங்கி 22ந்தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக முதல்நாள் கூட்டமான கடந்த 18-ஆம் தேதி 2022-2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாள் 19ந்தேதி அன்று, 2022-2023-க்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் 21, 22 மற்றும் 23-ஆம் தேதி காரசாரமாக நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து இன்று இறுதிநாள் அமர்வில் பட்ஜெட் விவாதங்களுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார்.
இதைடுத்து, கடந்த 18ம் தேதி துவங்கிய தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு பெற்றதாக அறிவித்த சபாநாயகர் அப்பாவு, அவையை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.