Tamilnadu Assembly Update In Tamil : தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் கடந்த இரு தினங்களாக நடைபெற்று வரும் நிலையில், இன்று சட்டசபையில் உரையாற்றிய வேளான்துறை அமைச்சர் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலின் திமுக இளைஞரணியில்இருந்து முதியோர் அணிக்கு வந்துளளார் என்று கூறியது சட்டசபயைில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தமிழக சட்டசபையில் கடந்த வார இறுதியில் 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 19-ந் தேதி வேளான்துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்ட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த வேளான்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து வருகிறார்.
அந்த வகையில் இன்று சட்டசபைில் உரையாற்றிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேசுகையில்,
எப்படி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுவது, எப்படி மேயராக பணியாற்றுவது, எப்படி துணை முதல்வராக பணியாற்றுவது எப்படி ஒரு இயக்கத்தின் தலைவராக பணியாற்றுவது என்பதற்கு உதாரண புருஷனாக விளங்குகின்றவர் நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள்.
அவர் இளைஞர். ஆக்ஷன் ஆக்டீவாக இருக்கின்றார். இளைஞர் அணியில் இருந்து முதியோர் அணிக்கு வந்து தலைவராக பொறுப்பேற்று இளைஞரைப்போல சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார். கழகத்தின் தலைவராக சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அவரை விட நாங்கள் வயதில் சிறியவர்கள் ஆனால் எங்களை விட அவர் வேகமாக செயல்படுகிறார்.
அவரின் உழைப்பை பார்த்து நாங்கள் அசந்துபோகிறோம். நாங்கள் அவரை நினைத்தத்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம்.சட்டமன்ற உறுப்பினர் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இருக்கும் ஸ்டாலின் அவர்களை கொளத்தூர் மக்கள் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள் அவர் ஒரு உதாரண புருஷன் அத்தகைய தலைவரை வணங்குகின்றேன் என்று பேசினார்.
இதில் இளைஞர் அணியில் இருந்து முதியோர் அணிக்கு வந்து என அமைச்சர் பேசுமபோது சட்டசபையே சிரிபலையில் ஆழ்ந்தது. அதுவரை சிறிய புன்னகையுடன் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின், சிரிப்பை அடக்க முடியாமல் குலுங்கி குலுங்கி சிரித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
“ “