ஷிவமொகா-தீர்த்தஹள்ளியின் பெரும்பாலான கிராமங்களில், ஒற்றை யானை நடமாடி மக்களை அச்சுறுத்துகிறது. தோட்டம், வயல்களில் புகுந்து பயிர்களை பாழாக்குவதால், விவசாயிகள் நஷ்டமடைகின்றனர்.ஹாசன் தீர்த்தஹள்ளியின், கீகடி, முட்லுமனே, ஹசகோடு, ஹளகத்தே, தளலே, கல்மனே என, பல கிராமங்களில் இரண்டு ஆண்டுகளாக, ஒற்றை காட்டு யானையின் தொந்தரவு உள்ளது. இரவில் நடமாடி மக்களை அச்சுறுத்துகிறது.கிராமத்தினர் உயிரை கையில் பிடித்து நடமாடுகின்றனர். நுாற்றுக்கணக்கான ஏக்கர் பாக்கு தோட்டத்தை நாசமாக்கியதுடன், பயிர்களையும் மிதித்து அழித்துள்ளது.இந்த ஒற்றை யானை எங்கிருந்து வந்தது என்பதே தெரியவில்லை. வனத்துறையினர் முகாமிட்டிருந்தும் கூட, யானையின் தொந்தரவை போக்க முடியவில்லை. ஆகும்பே பகுதியிலும் கூட, ஒற்றை யானை 15 ஆண்டுகளாக தொல்லை கொடுக்கிறது. இதை பிடிக்கவே முடியவில்லை. அதுபோல மன்டகத்தே சுற்றுப்பகுதியில் நடமாடும் யானையை பிடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஷிவமொகா-தீர்த்தஹள்ளியின் பெரும்பாலான கிராமங்களில், ஒற்றை யானை நடமாடி மக்களை அச்சுறுத்துகிறது. தோட்டம், வயல்களில் புகுந்து பயிர்களை பாழாக்குவதால், விவசாயிகள் நஷ்டமடைகின்றனர்.ஹாசன்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.