பெங்களூரு:பெங்களூரில் உள்ள 41 மால்களில் ஒன்பது ‘மால்’கள், மாநகராட்சிக்கு 70 கோடி ரூபாய் சொத்து வரி பாக்கி வைத்துள்ளன.
இது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி வருவாய்பிரிவு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: மிகப் பெரிய அளவில் ஷாப்பிங் வசதிகளை கொண்டுள்ள மால்கள் 70 கோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளன. இது தொடர்பாக, காரணம் கேட்டு மால்களின் உரிமையாளர்களுக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது.அவர்கள் சொத்து வரி செலுத்தா விட்டால், ஜப்தி வாரன்ட் அனுப்பி, வரியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பொம்மனஹள்ளி மண்டலத்தின், ராயல் மீனாட்சி மால் 15 கோடி ரூபாய்; தாசரஹள்ளியின் மே.ராக்லைன் மால் 7 கோடி ரூபாய்; மகாதேவபுரா மண்டலத்தின் வர்ஜீனியா மால் 65 லட்சம் ரூபாய்.சோல் ஸ்பேஸ் அரேனா மால் 85 லட்சம் ரூபாய் உட்பட நகரின் ஒன்பது மால்கள் 70 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு:பெங்களூரில் உள்ள 41 மால்களில் ஒன்பது ‘மால்’கள், மாநகராட்சிக்கு 70 கோடி ரூபாய் சொத்து வரி பாக்கி வைத்துள்ளன.இது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி வருவாய்பிரிவு மூத்த அதிகாரி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.