மதுரையில் நடனமாடிக் கொண்டிருந்த பரதநாட்டியக் கலைஞர் ஒருவர், அசெளகரியத்தை உணர்ந்து மேடையில் இருந்து கீழே இறங்கியதும் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அதில், தனது மகள் மற்றும் மாணவ மாணவிகளுடன் இணைந்து 54 வயதான பரதநாட்டிய கலைஞர் காளிதாஸ், மேடையில் நடனமாடியுள்ளார். திடீரென அசெளகரியத்தை உணர்ந்து நடனமாடுவதை நிறுத்திவிட்டு அங்கிருந்தவர்களிடம் தண்ணீர் கேட்டுள்ளார்.
அவரது மகள், மாணவ, மாணவிகள் விடாமல் தொடர்ந்து நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். சேரில் அமர்ந்து தண்ணீர் பருகி ஆசுவாசப்படுத்திக் கொண்ட காளிதாஸ், சிறிது நேரம் கழித்து எழுந்து நடந்து சென்ற போது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மாரடைப்பால் அவர் உயிரிழந்திருக்கக் கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் காட்சிகள் அனைத்தும், நிகழ்ச்சியின் வீடியோ பதிவில் பதிவாகியுள்ளது.