நடிகர் சங்கம் கட்ட 21 லட்சம் வேண்டும்: பொதுச் செயலாளர் விஷால்
3/24/2022 12:10:29 PM
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணை தலைவர்களாக கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் தேர்வு பெற்றனர். இவர்கள் நட்சத்திர ஓட்டலில் நடந்த செயற்குழுவில் பதவி ஏற்றுக் கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பொதுச் செயலாளர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் சங்க தேர்தலுக்கு ஆகும் செலவை கட்டடத்திற்கு பயன்படுத்த நாங்கள் நினைத்தோம். அத்துடன் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் எனவும் முயற்சித்தோம். ஆனால் எதிரணியினர் இதை போட்டியாக பார்த்தனர்.
தேர்தல் முடிந்து 3 ஆண்டுகள் கழித்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது வேறு எங்கும் நடைபெறவில்லை. இதுதான் முதல் முறை. தற்போது நாங்கள் வெற்றி அடைந்துள்ளோம். திரும்ப திரும்ப நாங்கள் சொல்வது ஒன்று தான், நாடக நடிகர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தான் நாங்கள் எல்லோரும் போராடுகிறோம். அது நல்லபடியாக நடக்கும் அத்துடன் நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிக்க 21 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அதற்கான நிதி திரட்டும் வேலையில் இறங்க உள்ளோம். நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டவர்கள் அனைவரையும் நேரில் சந்திப்போம். என்றார்.