சியோல்:கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் நவீன ஏவுகணை சோதனையை, வட கொரியா மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, தொடர்ந்து அதி நவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்தாண்டில், இதுவரையிலும், 12 முறை ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. இந்நிலையில், 6,000 கி.மீ., துாரம் சென்று, குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை, வட கொரியா மேற்கொண்டதாக, ஜப்பான் தெரிவித்துள்ளது.
வட கொரியா சோதனை செய்த நவீன ஏவுகணை, அமெரிக்காவை தாக்கும் அளவிற்கு திறன் உள்ளதாக கூறப்படுகிறது. வட கொரியா மீது, அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள வட கொரியா, அமெரிக்கா மற்றும் அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியாவை மிரட்டும் நோக்கில், அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
சியோல்:கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் நவீன ஏவுகணை சோதனையை, வட கொரியா மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, தொடர்ந்து அதி நவீன ஏவுகணை சோதனைகளை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.