* கொங்கன் ரயில்வே இணைப்பு இல்லைமக்களவையில் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய ரயில்வே இணையமைச்சர் ராவ்சாகேப் பாட்டீல் தன்வே அளித்த பதிலில், `இந்திய ரயில்வேயுடன் கொங்கன் ரயில்வேயை இணைக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை. ரயில்வே திட்டம் மண்டலம் வாரியாக செயல்படுத்தப்படுகிறதே தவிர, மாநிலங்கள் வாரியாக அல்ல. 16 புதிய வழித்தடங்கள், 2 அகல ரயில் பாதை, 17 இருவழித்தடங்கள் என மொத்தம் ரூ.91,137 கோடி மதிப்பிலான 35 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன,’ என தெரிவித்தார்.* 320 ஆப்களுக்கு தடைமக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சோம் பர்காஷ், “இணைய பயனாளிகளின் பாதுகாப்பு கருதி, இதுவரை 320 மொபைல் செயலிகளுக்கு தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-த்தின் கீழ் அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே தடை செய்யப்பட்டு வேற்று பெயரில் செயல்பட்டு வந்த 49 மொபைல் செயலிகள் கடந்த மாதம் மீண்டும் தடை செய்யப்பட்டுள்ளன,’ என்று கூறினார்.