நாட்டில் கொவிட் 19 தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் , 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செவ்வாயன்று 14 ஆயிரத்து 41 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
தொற்றுநோயியல் பிரிவு அறிக்கையின்படி, 1 கோடி 69 இலட்சத்து 95 ஆயிரத்து 787 பேர் கொவிட் 19 தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளதோடு, 1 கோடியே 43 இலட்சத்து 87 ஆயிரத்து 77 பேருக்கு இரண்டாவது வழங்கப்பட்டுள்ளது.
மூன்றாவது டோஸ் 77 இலட்சத்து 19 ஆயிரத்து 703 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளன.. இதில் செவ்வாய்க்கிழமை (22) 7 ஆயிரத்து 629 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன. பைசர் தடுப்பூசி பூஸ்டர் டோஸாக செலுத்தப்பட்டுள்ளது.
பைசரின் முதல் டோஸ் செவ்வாய்க்கிழமை(22) ஆயிரத்து 384 பேருக்கும், இரண்டாவது டோஸ் 4 ஆயிரத்து 273 பேருக்கும் வழங்கப்பட்டன. மொத்தத்தில் பைசரின் முதல் டோஸ் 25 இலட்சத்து 4 ஆயிரத்து 888 பேருக்கும், இரண்டாவது டோஸ் 8 லட்சத்து 55 ஆயிரத்து 149 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
செவ்வாயன்று (22), 113 நபர்கள் சினோபார்மின் முதல் டோஸைப் பெற்றனர், மொத்தமாக முதல் டோஸைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 20 இலட்சத்து 47 ஆயிரத்து 357 ஆக அதிகரித்துள்ளது. சினோபார்மின் இரண்டாவது டோஸ் 1 கோடியே 11 இலட்சத்து 70 ஆயிரத்து 162 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.. இதில் செவ்வாய்க்கிழமை 642 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அஸ்ட்ராசெனிக்கா முதல் டோஸ் 14 இலட்சத்து 79 ஆயிரத்து 631 பேருக்கும், இரண்டாவது டோஸ் 14 இலட்சத்து 18 ஆயிரத்து 593 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம் 8 இலட்சத்து 4 ஆயிரத்து 801 பேருக்கு மொடோனா தடுப்பூசியின் முதல் டோஸையும்,7 இலட்சத்து 87 ஆயிரத்து 361 பேர் . இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் இதுவரையில் பெற்றுள்ளனர்.
ஸ்புட்னிக் வி இன் முதல் டோஸை 1 இலட்சத்து 59 ஆயிரத்து 110 பேரும், இரண்டாவது டோஸ் 1 இலட்சத்து 55 ஆயிரத்து 812 பேரும் பெற்றுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு கூறுகிறது.