நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்பே 400 பில்லியன் டாலர் சரக்கு ஏற்றுமதி இலக்கை இந்தியா அடைந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், கொரோனா அலைகளின் தொடர்ச்சியான சவால்கள் இருந்த போதிலும் இந்தியாவின் வர்த்தக செயல்திறன் குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை பதினொரு மாதங்களுக்கு தொடர்ந்து 30 பில்லியன் டாலருக்கு மேல் ஏற்றுமதி இருந்ததாகக் குறிப்பிட்ட பியூஷ் கோயல் 400 பில்லியன் டாலர் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு 9 நாட்களுக்கு முன்பே எட்டி விட்டதாகவும் தெரிவித்தார்.