கரியனில் உள்ள பாகிஸ்தானின் இராணுவ தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான 5 வது சர்வதேச பாகிஸ்தான் இராணுவ அணி ஸ்பிரிட் (PATS) போட்டியில் பங்கேற்ற இலங்கை இராணுவ அணி, வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
இந்த போட்டி மார்ச் 3 முதல் 13 வரை நடைபெற்றது, இதில் 16 க்கும் மேற்பட்ட சர்வதேச அணிகள் போட்டியிட்டன. நேபாளம், துருக்கி, மொராக்கோ, உஸ்பெகிஸ்தான், பஹ்ரைன், கென்யா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற இந்நிகழ்வில், 30 போட்டிச் சுற்றுகளுக்குப் பிறகு சிறந்த உடல் மற்றும் மன உறுதித் திறன் கொண்ட சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.80 கிமீ நேவிகேஷன் மார்ச், கிராசிங் ஆஃப் வாட்டர் அஸ்ஸால்ட் ட்ரில், ஆன்ட்டி அம்புஷ் ட்ரில், ஹெலி மார்ஷலிங், ஸ்ட்ரெச்சர் ரன் போன்றவை அதன் போட்டி முழுவதும் இதில் அடங்கும் .
இலங்கை அணியில் இலங்கை இலேசாயுத காலாட்படையணி, இலங்கை சிங்கப் படையணி, கஜபா படையணி, விஜயபாகு காலாட்படையணி மற்றும் இயந்திரவியல் காலாட்படையணி ஆகியவற்றை சேர்ந்த மூன்று அதிகாரிகளும் எட்டு சிப்பாய்களும் அடங்குவர்.
இலங்கை இராணுவம்