புதுடெல்லி:
பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபாரமாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. கடந்த 16-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் பூர்வீக கிராமமான கட்கர் கலனில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் பஞ்சாப் முதல் மந்திரியாக பகவந்த் மான் பதவியேற்றார்.
இந்நிலையில், பஞ்சாப் முதல் மந்திரியாக பதவியேற்ற பிறகு முதல்முறையாக பகவந்த் மான் நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இதுகுறித்து பிரதமரின் அலுவலக டுவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக, முதல் மந்திரி பகவந்த் மான் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பஞ்சாப் பிரச்சனைகள் குறித்துப் பேசினேன். பஞ்சாபில் உள்ள பிரச்சினைகளுக்கு மத்திய அரசிடம் இருந்து தேவையான ஆதரவு கிடைக்கும் என உண்மையாக நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்…பீர்பூம் வன்முறை: குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்- மம்தா