ரஷ்யாவில் செயல்பட்டு வரும் பிரான்ஸ் நிறுவனங்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவத் தாக்குதலால் பல்வேறு நாடுகள் ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் காணொலி மூலம் உரையாடிய அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் நிறுவனங்களான ரெனால்ட், ஆச்சான், லெராய் மெர்லின் உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.