பீஜிங் ஆய்வுக்கூடத்தில் விமான கறுப்பு பெட்டி| Dinamalar

பீஜிங்:சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி பீஜிங்கில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

நம் அண்டை நாடான சீனாவில் ‘சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் – 737’ உள்நாட்டு பயணியர் விமானம் குவாங்ஸி மாகாணத்தில் உள்ள மலைப் பகுதியில் சமீபத்தில் செங்குத்தாக விழுந்து நொறுங்கியது.இதில் அந்த விமானம் சுக்குநுாறாக நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. விமானத்தில் இருந்த 132 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விமானத்தில் தகவல்களை பதிவு செய்யும் இரண்டு கறுப்பு பெட்டிகளில் ‘பைலட்’ அறையில் இருந்த ஒரு கறுப்பு பெட்டி சேதமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.இந்நிலையில் அந்த கறுப்பு பெட்டி தலைநகர் பீஜிங்கில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் பதிவாகி உள்ள தகவல்களை கண்டறியும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக சீன விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் தலைவர் ஜூ டாவோ தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இரண்டாவது கறுப்பு பெட்டியை கண்டெடுக்கும் பணியில் மீட்புக் குழுவினர் முழுவீச்சில் இறங்கி உள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.