புடினுடைய அதிபர் பதவி எந்த நேரமும் பறிபோகலாம்… வேகமாக உருவாகி வரும் ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டம்


புடினுடைய அதிபர் பதவி எந்த நேரமும் பறிபோகலாம் என்றும், ரஷ்ய பாதுகாப்பு அமைப்பு ஒன்று உருவாக்கி வரும் ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டம் வேகமாக வளர்ந்து வருவதாகவும் ரஷ்யாவைச் சேர்ந்த ஊழலை அம்பலப்படுத்தும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனை ஊடுருவ ரஷ்யா போட்ட திட்டம் குளறுபடியாக, ரஷ்ய பெடரல் பாதுகாப்பு சேவை (Russia’s Federal Security Service – FSB) அமைப்புக்குள் குழப்பமும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, புடினுடைய அதிபர் பதவி எந்த நேரமும் பறிபோகலாம் என்று கூறியுள்ளார் அவர்.

பிப்ரவரி 24ஆம் திகதி ரஷ்யா உக்ரைனுக்குள் ஊடுருவியபோது, அவ்வளவுதான் உக்ரைன் காலி என்றே ரஷ்யாவைப் போலவே பலரும் நினைத்தார்கள்.

ஆனால், இன்று வரை கெத்தாக நின்று ரஷ்யா என்னும் வலிமை மிக்க நாட்டின் படைகளை சமாளிக்கிறது உக்ரைன்.

இதனால் FSB அமைப்பிலுள்ளவர்களுக்கு அதிபர் புடின் மீது கோபம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் Vladimir Osechkin, இவர்தான் ரஷ்ய சிறைகளில் நடக்கும் துஷ்பிரயோகங்கள் குறித்த தகவல்களை வெளி உலகுக்குத் தெரியப்படுத்தியதால் ரஷ்ய அரசால் தேடப்படுபவர்.

நினைத்தது போல உக்ரைனை எளிதாகக் கைப்பற்ற முடியாததற்காக புடின் FSB மீது குற்றம் சாட்ட, FSB அமைப்பிலுள்ளவர்களோ மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதித்து வரும் தடைகளால் விரக்தியடைந்துள்ளார்கள்.

இந்த அமைப்பிலுள்ளவர்கள் பயணம் செய்யவும், தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் Osechkin, அவர்கள் மீண்டும் பழைய சோவியத் யூனியன் உருவாகும் நிலைக்குச் செல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

போர் நீடிக்க நீடிக்க அவர்களது எதிர்ப்பும் வலுத்து வருவதாக தெரிவித்துள்ளார் Osechkin. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.